நடிகை அஞ்சலி தமிழில் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’, ‘தரமணி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார்.
பல வருடங்களுக்கு முன்பு நடிகை அஞ்சலி மற்றும் அவரது சித்தி பாரதி தேவி இடையே சண்டை வெளிப்படையாகவே நடந்தது. அவரின் உறவை முறித்து தற்போது அஞ்சலி தனியாக இருந்துவருகிறார்.
இந்நிலையில்,நடிகை அஞ்சலியின் தங்கையும், பாரதி தேவியின் மகளுமான ஆராத்யா தற்போது தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
ஆராத்யா அறிமுகமாகும் தெலுங்குப் படத்திற்கான பிரஸ்மீட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆராத்யா, அஞ்சலி தன் சகோதரி எனப் பேசினார்.
இதற்கு கோபமாக மறுப்பு தெரிவித்த அஞ்சலி தனக்கு ஒரே ஒரு அக்கா மட்டுமே இருக்கிறார் எனவும், அவருக்கு திருமணம் ஆகிவிட்டது எனவும் கூறியிருந்தார். மேலும் வேறு யாரும் எனக்கு சகோதரி இல்லை எனவும் கூறினார்.
அஞ்சலி இப்படிக் கூறியது பற்றி தற்போது பேசியுள்ள ஆராத்யா, ‘அவர் மறுக்கிறார் என்பதற்காக உண்மை மாறிவிடுமா’ எனக் கேட்டுள்ளார்.
நடிகை அஞ்சலிதான் தனது தங்கை ஆராத்யாவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்த இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படிப் பேசியிருப்பது அவர்களது குடும்பத்தில் மீண்டும் விவகாரம் ஏற்பட்டதெனத் தெரிகிறது.