உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனுக்காக சசிகலா பரோல் கேட்கவில்லை என கர்நாடகா அதிமுக தினகரன் அணியின் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, அதை பெங்களூர் சிறையில் அனுபவித்து வருகிறார்.
சசிகலாவின் கணவர் ம நடராஜன் உடல் நிலை மோசமாகியுள்ளது. அவரது சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து, மாற்று உறுப்புகள் பொருத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கணவர் உடல் நிலை மோசமடைந்ததை அறிந்த சசிகலா, அவரை நேரில் பார்க்க பரோலில் வர விரும்பியதாகவும், அதற்காக சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டதாகவும் தகவல் பரவியது.
ஆனால் இதனை மறுத்துள்ளார் கர்நாடகா அதிமுக நிர்வாகியான புகழேந்தி. “சசிகலா பரோல் கேட்கவில்லை. தேவையில்லாமல் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்