ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு எதிராக சீறிய சுஷ்மா- சும்மா கிழி.கிழி.கிழி!

sushma-swaraj

⁠⁠⁠மனித சமுதாயத்திற்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. தீவிரவாதிகளை பட்டியலிடுவதில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் இணக்கமாக இல்லாதபோது, சர்வதேச சமூகம் தீவிரவாதத்தை எப்படி ஒடுக்க முடியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பினார்.

ஐநா பொதுச்சபையின் 72வது கூட்டத்தில் கலந்துகொண்ட சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

தீவிரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என பாகுபடுத்திப் பார்த்துக் கொண்டிருந்தால் தீவிரவாத பிரச்னைக்குத் தீர்வு காண்பது எப்படி? நம் எதிரியை தீர்மானிப்பதில் நாம் ஒருங்கிணையாவிட்டால் தீவிரவாதத்தை எவ்வாறு ஒழிக்க முடியும்?

கொடூரமான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதத்தை ஒடுக்க ஐநா உறுப்பு நாடுகள் விரிவான ஒப்பந்தத்தை இந்தாண்டே ஏற்படுத்த உறுதியேற்க வேண்டும். தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமான நாடு இந்தியா. தீவிரவாதம் குறித்த விவகாரத்தை ஐநா சபையில் ஏற்கனவே இந்தியா எழுப்பியபோது பல நாடுகள் ஏற்க மறுத்தன. ஆனால் இன்று பெரும்பாலான நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ina

இந்தியா கல்வியை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது. சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்காக ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களையும் இஸ்ரோவையும் இந்தியா உருவாக்கியது. ஆனால் பாகிஸ்தானோ லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது.

Poonch

சிறந்த பொறியாளர்களையும் மருத்துவர்களையும் விஞ்ஞானிகளையும் இந்தியா உற்பத்தி செய்கிறது. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை மட்டும்தான் உற்பத்தி செய்கிறது. தீவிரவாதிகளை உற்பத்தி செய்து இந்தியா மீதும் பல்வேறு நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்திவருகிறது. தீவிரவாதத்தை ஊக்குவிக்க செலவிடும் பணத்தை தங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக பாகிஸ்தான் செலவிட வேண்டும்.

இவ்வாறு பாகிஸ்தானின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டும்வகையில் சுஷ்மா ஸ்வாரஜ் பேசினார்.

Leave a Response