பள்ளிக்கு என் மகளை புல்லட்டில் கூட்டிச் சென்றேன்… பெருமைபடும் நடிகை!

dev
மகளிர்மட்டும் படத்தை பற்றி கூறும் ஜோதிகா;-

மகளிர்மட்டும் ரோட்- ட்ரிப்பில் ஒன்றில் மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பது தான் கதை. இந்த கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரோடு இனைந்து நடிக்கும் போது சிறிது பயமாக இருந்தது. எங்கள் முதல் நாள் படபிடிப்பு ஒரு படகில் வைத்து நடைபெற்றது. அப்போது என்னால் சரியாக வசனத்தை கூறி நடிக்க முடியவில்லை. அப்போது அவர்கள் மூவரும் தான் என்னை Comfort zoneக்கு கொண்டுவந்தார்கள். நான் ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

நான் படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. எனக்கு சூர்யா 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். அதன் பிறகு மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஷீபா என்ற பயிற்சியாளர் ஒருவர் எனக்கு புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். நான் என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது. மகன் தேவ்வுக்கு சூர்யா தான் எப்போதும் ஹீரோ. நாச்சியார் படத்தின் மூலம் நான் தேவ்வுக்கு ஹீரோவாக தெரிவேன் என்று நம்புகிறேன். நான் தற்போது சூர்யாவோடு ரெகுலராக ஜிமுக்கு சென்று வருகிறேன். நான் என்னோடு நடித்த சக நடிகர்களை விட ஐந்து வயதாவது இளமையாக தெரிவேன் என்று நம்புகிறேன்.
dev 2
பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் தற்போது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இயக்குநர் சுதா கொங்காராவுக்கு மாதவன் வாய்ப்பு கொடுத்தது நல்ல விஷயம். அவர் வாய்ப்பு கொடுத்ததால் தான் இறுதிசுற்ற என்று ஒரு படம் வெளிவந்து வெற்றிபெற்றது. இந்த நிலை மாற வேண்டும். பெண் எழுத்தாளர்கள் யாரும் அறியாத ஹீரோஸ் என்றார் ஜோதிகா.

Leave a Response