நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட வேண்டும்! -மாணவர்களுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை வேண்டுகோள்

ban-neet
அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையையடுத்து நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நாடெங்கும் வலுத்து வருகிறது. போராட்டம் இன்னும் தீவிரமாகும் நிலையிலிருக்கிறது!

ஈரோடு மாவட்டம், பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று நடைப்பெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த தம்பிதுரை முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

thampi durai

அப்போது அவர், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. ஆகவே, கல்லூரி மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிரான தங்களுடைய போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி இயற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தள்ளுபடி செய்யப்படாமல் நிலுவையில் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
neet-2017_wm

Leave a Response