பாஜகவை ஆதரித்தவர் கமல்! எஸ்.வி.சேகர் பேட்டி

sv-sekar5-600
பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே கமல்ஹாசனை பல்வேறு தரப்பு பிரமுகர்களும் சந்தித்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் நடிகர் எஸ்.வி. சேகர் இன்று கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார்.

சந்திப்புக்குப் பின் அவர் தெரிவித்த கருத்து;-

கமல் எனக்கு 40 ஆண்டுகால நண்பர். அவர் போன்ற நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. வருமான வரியை முறையாக கட்டும் கமல் அரசியலுக்கும் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

எல்லாவற்றையும் விமர்சிக்கும் கம்யூனிஸ்டுகளைப் போல் இல்லாமல் சரியாக விமர்சிக்கும் கமல் போன்றவர்களின் விமர்சனம் சரியானது. மேலும் இப்போது வரை பாஜகவை விமர்சிக்கவில்லை. அதோடு தூய்மை இந்தியா, பண மதிப்பு நீக்கம் போன்றவற்றை கமல் ஆதரித்தவர்.

நீட் இன்னும் பலருக்கு புரியாத விஷயமாக இருக்கிறது. கல்வி கொடுக்க வேண்டிய அரசு மது விற்கிறது. மது விற்க வேண்டியவர்கள் கல்விக்கூடம் நடத்துகிறார்கள். இரு எல்லாருக்கும் காரணம் அரசின் ஸ்திரமற்ற தன்மைதான் காரணம்.

நீட்டிலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்களிக்க முடியாது. ஏனென்றால் தமிழகமும் இந்தியாவில்தான் இருக்கிறது!’’

Leave a Response