5 வருட ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்… கைப்பற்றிய ஸ்டார் இந்தியா!

star-ipl
2018 முதல் 2022 வரை 5 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதற்கான ஒளிபரபப்பு உரிமத்தொகை ரூ.16,347 கோடி ஆகும்.

மும்பையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதிக தொகை கொடுத்து, 5 ஆண்டுகளுக்கு ரூ. 16,347 கோடிக்கு ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் ஏலம் எடுத்தது. ஸ்டாருக்கு போட்டியாக களமிறங்கயி சோனியின் உரிமத்தொகையை விட அதிக தொகை கொடுத்து, ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் டிவி கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்ஷர்சிப்பை 5 ஆண்டுகளுக்கு ரூ.2199 கோடிக்கு விவோ மொபைல் நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response