அரசியலை கற்றுக்கொள்ள கேரள முதல்வரை சந்தித்த கமல்!

kamil kerla

தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று கூறியது ஆளும் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. அவர் அரசியலுக்கு வர அச்சாரமாக பேசி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் கமல் நேற்று இரவு கேரளா சென்றார். இன்று மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். தொடர்ந்து கமலுக்கு முதல்வர் வீட்டிலேயே இன்று மதிய விருந்தளிக்கிறார்.

திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் கமல். அப்போது அவருடைய கேரளா பயணம், முதல்வர் சந்திப்பு மற்றும் அரசியல் வாழ்க்கை பற்றி கருத்து தெரிவித்தார். அதில் ஓணம் பண்டிக்கை வாழ்த்து தெரிவிக்க ஓராண்டு காலம் காத்திருந்து தற்போது கேரளா வந்துள்ளதாகவும், அரசியலுக்கு பிரயோஜனம் ஆகக்கூடிய சில விஷயங்களை கற்றுக் கொள்ளவே முதல்வரை சந்தித்ததாக தெரிவித்தார்.

அப்போது கேரள தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மலையாளதில் மிக அழகாக பதில் கூறினார்.அதில் ஒவ்வொரு நாளும் எதையாவது ஒன்று கற்றுக்கொண்டே தான் இருக்கிறோம். இதையும் நான் இப்படிதான் பார்கிறேன், அந்த வகையில் இன்று என்னுடைய வருகை அரசியல் கற்றுக்கொள்ள வந்ததாக கூட எடுத்துக்கொள்ளலாம் என மலையாளத்தில் மிக அழகாக கூறினார்.

நடிகர் கமல் கேரளாவிற்கு சென்று, அம்மாநில மொழியான மலையாளத்தில் பேசியது தமிழ் மக்களை பெருமை கொள்ளும் விதமாகவும், கேரள மக்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருகின்றது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Response