பித்தம் தணிய சுக்குப் பொடி சாப்பிடுங்க! தினம் ஒரு ஆரோக்கியத் தகவல்

sukku1

1. சுக்கை தாய்பால் சேர்த்துஅரைத்து வயிற்றில் தடவினால், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு உப்புசம் நீங்கும்.

2. சுக்கை தண்ணீர் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. சுக்குப் பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கடுமையான வயிற்று வலி குணமாகும்.

4. சுக்குப் பொடியில் தயிர் மற்றும் வெல்லம் கலந்து சாப்பிட்டால் பித்தம் தணியும்.
sukku2

5. சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் சம அளவு எடுத்து தூள் செய்து கஷாயமாக குடித்தால் காய்ச்சல், வாய்ப்புண், மண்ணீரல் வீக்கம், அஜீரணம் போன்றவை குணமாகும்.

6. சுக்கு, தனியா இரண்டையும் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். ஊளைச் சதை ஏற்படாது.

7. சுக்கை அடிக்கடி கஷாயம் வைத்துக் குடித்தால் தலைவலி, தலைச்சுற்று போன்றவை வராது.

8. சுக்குத் துண்டை தோல் நீக்காமல் வாயில் போட்டு மென்றால் பல்வலி குறையும்.

9. தோல் நீக்கிய சுக்கை (இரண்டு கிராம்) பசும்பாலில் (இரண்டு லிட்டர்) போட்டுக் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி, வாயுத்தொல்லை, உடல் அசதி போன்றவை குணமாகும்.

10. சுக்கைப்பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நாவறட்சி குணமாகும்.

11. சுக்குப் பொடியை தேனில் குழைத்து முன்று வேளை உணவுக்குமுன் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு குணமாகும்.

தகவல்: சித்த மருத்துவர் Aadhavan Siddhashram அருண் சின்னையா

Leave a Response