நேற்று வரை 19 பேர், இன்று 60 பேர்! தினகரன் அணி சவால்

ttv13

இரண்டு, மூன்று அணிகளாக பிரிந்திருக்கிற அதிமுக.வில் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒ.பி.எஸ். அணியும் கடந்த வாரம் இணைந்ததில் ஓபிஎஸ் துணை முதல்வர் ஆனார்!

இந்த சூழ்நிலையில் தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் எடப்பாடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்!

எடப்பாடி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் முதல்வரை மாற்ற வேண்டும் என்றும், அரசுக்கான தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும் கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்!

அதன் பிறகு, டிடிவி தினகரன் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சொகுசு வசதிகள் செய்து கொடுத்து தங்க வைத்துள்ளார்.

தினகரனுக்கு 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்த நிலையில் தற்போது அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச் செல்வனும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்க வேண்டும் என நாங்கள் எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. டிடிவி தினகரனை
60 எம்.எல்.ஏ க்கள் 8 அமைச்சர்கள் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

Leave a Response