Tata sky too joined in the Viswaroopam campaign:

சன் டைரக்ட், ஏர்டெல், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ் மற்றும் டாட்டா ஸ்கையில் விஸ்வரூபம்:

கமலஹாசன் இயக்கத்தில் ரூ 95 கோடி செலவில் உருவாகியுள்ள விஸ்வரூபம் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 11-ம் தேதி வருகிறது. அதற்கு ஒருநாள் முன்னதாக டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல் அறிவித்திருந்தார். இதற்கு திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

DTH-ல் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடமாட்டோம் என எச்சரித்தனர். அது குறித்து சென்னை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. சந்திப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கேயார், காட்ரகட்ட பிரசாத், சக்தி சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் கமல் பேசும் போது ”விஸ்வரூபம் படம் DTH-ல் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் வெளியிடப்படுகிறது. இதை பார்ப்பதற்கு ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். DTH-ல் ஒருமுறை மட்டும் ஒளிபரப்பப்படும். இதை பதிவிறக்கம் செய்யமுடியாது. சன் டைரக்ட், ஏர்டெல், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய DTH-கள் ஒளிபரப்பு செய்கின்றன. இப்போது கடைசியாக டாட்டா ஸ்கை குழுமமும் இணைந்து கொண்டுள்ளது.

இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது. ஏனென்றால் “PVR”(Private Video Recording) என்ற வசதியை நிறுத்தி வைக்க சொல்லி DTH நிறுவனங்களிடம் கேட்டிருக்கிறோம். அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர சம்மதித்துள்ளனர். மேலும் கிளப், ஹோட்டல் போன்ற போது இடங்களில் திரையிடவும் தடை செய்யப்பட்டுள்ளது. இது வீடுகளை மட்டும் தான் சென்றடையும். இதனால் திரையரங்குகளுக்கு எந்த இழப்பும் ஏற்படாது.

நான் தங்க பாதையில் பயணம் செய்ய அழைக்கிறேன், நீங்கள் செருப்பு தேய்ந்து விடும் என்று நினைத்து பயப்படுகிறீர்கள். திரையரங்கிற்கு வந்து பார்த்தால் தான் இந்த விஸ்வரூபம் சரியாக வெளிப்படும். எனவே நிச்சயம் ரசிகர்கள் திரையரங்குகளை தேடி வருவார்கள்.

விஸ்வரூபம் படத்தை என் குருநாதர் கே.பாலசந்தர், நண்பர் பாரதிராஜா, “ஷோலே” ரமேஷ் சிப்பி ஆகிய மூவரும் பார்த்துவிட்டு பாராட்டியதையே வெற்றிக்கு அடித்தளமாக கருதுகிறேன். படத்தை பார்த்த பாலசந்தர் சொன்ன விஷயம் ” அல்லா வில் பிளெஸ் யு”(Allah will Bless you)” என்றார்.