தினகரன் போட்ட மாஸ்டர் பிளான், பிளாஸ்டர் பிளானாக அமையுமா?

ttvsupporters

அதிமுகவில் பிரிந்திருந்த பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று ஒன்றாக இணைந்தனர். ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராகவும், பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பொதுக் குழுவை கூட்டி சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து தினகரனுடன் ஆலோசனை நடத்தி வந்த அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு திடீரென சென்று தியானத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைப்பு குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும், இன்று காலை 10மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். ஆளுநரை சந்திப்பதற்கான காரணம் என்ன என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது கூவாத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறது.

thinakarn

தினகரன் பிளான்:-

தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பது தினகரனுக்கு ஆதரவாக சுமார் 18 முதல் 26 எம்.எல்.ஏ’க்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி இன்னும் சில எம்.எல்.ஏ’க்கள் மற்றும் அமைச்சர்களின் குடுமிப்பிடி ஆதாரங்கள் இவரிடம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த எம்.எல்.ஏ’க்கள் சப்போர்ட் மற்றும் சில ஆதாரங்களை வைத்து தினகரன் ஆட்சியை கலைக்க வாய்ப்பிருப்பதாக நம்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பன்னீர்செல்வவம் மற்றும் எடப்பாடி அணிகள் இணைவதற்கு பிரதமர் மோடி அவர்களின் மாஸ்டர் பிளான் மூலமாக ஆடிட்டர் குருமூர்த்தி செயல்படுத்தியது ஊர் அறிந்த விஷயம். இந்த நிலையில் தினாகரனுடைய பிளான் கவர்னரிடம் எடுபடுமா என்பது சிந்திக்க வேண்டியுள்ளது. மொத்தத்தில் தினகரன் போடும் பிளான் அவருக்கு சாதகமான மாஸ்டர் பிளானா? ஆட்சியை கலைக்க பிளாஸ்டர் பிளானா?? என்பது இன்று அவர் கவர்னரை சந்தித்தால் தெரியவரும். லெட்ஸ் வெய்ட் அண்ட் வாச்!.

Leave a Response