‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு மெர்சல் கொடுத்த விஜய் !

nam
மெர்சல் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. அதில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ், நடிகர் விஜய் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்துரையாடினார்கள்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடந்தது. படக்குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விழா அரங்கில் குவிந்திருந்தனர்.

நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளாகியுள்ளது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று தொகுப்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர். ரகுமானிடம், “ஆளப்போறான் தமிழன் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும். அது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம்” என்று உற்சாகம் பொங்க பேசியுள்ளார்.

பார்த்திபன் கொளுத்திய வெடி

நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், “ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் ஒன்னு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியாது. ஆனா விஜய்யும் அவரது ரசிகர்களும் சேர்ந்தால் விஜய் தான் இனி சி.எம்.” என்றார். இதனை கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். பின்னர் (கொஞ்சம் இடைவெளிவிட்டு) “சி.எம்னா கலெக்‌ஷன் மன்னன்” என்றார்.

மேலும், சமீபத்தில் விஜய் ரசிகர்களால் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்ட போது, விஜய் நடந்து கொண்டவிதம் பாராட்டத்தக்கது எனவும் பார்த்திபன் பேசினார்.

ஏற்கனவே, விஜய் அரசியலில் களமிறங்குவார் என ஸ்கூப் நியூஸ்கள் ரெக்கை கட்டி பறந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பார்த்திபனின் இந்த பேச்சு, அரசியல் மற்றும் சினிமா அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் விஜய்க்கு புகழாரம்:-

விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நம் தோளில் கைப் போட்டு பேசுவார். அதே போல் அவரது தோளில் கை போடவிட்டும் பேசுவார். இது போன்றதொரு குணம், நல்ல மனசு இருக்கும் நண்பனால் தான் முடியும்.

ஒரு இரும்பு சுத்தியலால் அடிவாங்கி கத்தியாக மாறி ஷார்ப்பாக இருக்கிறார். விஜய் இங்கு மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகிலேயே அமைதி தான் மிகச்சிறந்த ஆயுதம் என்று சொல்வார்கள். அதை விஜய்யிடமிருந்து கற்றுக் கொண்டேன். இந்த விழாவில் விஜய் ரசிகர்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு தனுஷ் பேசினார்.

இசை வெளியிட்டில் விஜய் பேசியது:-

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘மெர்சல்’ படத்தின் நான்கு பாடல்கள் விழா மேடையில் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் நிறைவாக மேடை ஏறிய நடிகர் விஜய் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேசினார். 100 வது படம் தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் 25 வது வருடத்தில் அடியடுத்து வைக்கும் ரகுமான்-க்கு வாழ்த்துக்கள் சொல்லி பேச தொடங்கினார்.

அப்போது அவர், “வாழ்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்கன்னு கேக்குறாங்க. அத விட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும், அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும் தான். எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் நண்பா” என்று பேசினார்.

Leave a Response