‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவில் விஜயின் பேச்சு என்னவாக இருக்கும்?

mersalaudio

விஜய் நடித்து, அட்லீ இயக்கியிருக்கும் படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 20) மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவின் சிறப்பம்சங்கள் குறித்து விழாக்குழுவினர் சிலரிடம் பேசிய போது, “‘மெர்சல்’ படத்தின் 3 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் தன் குழுவினரோடு ரசிகர்கள் முன்னிலையில் பாடவுள்ளார்கள். மேலும் விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் கலந்துரையாடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. கண்டிப்பாக இது முக்கியமான நிகழ்வாக இருக்கும்.

தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் 25 ஆண்டுகள் கடந்திருப்பதால், அவரோடு பணிபுரிந்த பாடகர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். மேலும், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பு என்பதால், தங்களுடைய திரையுலக பயணத்தையும் வீடியோ வடிவில் திரையிடவும் முடிவு செய்துள்ளார்கள். விஜய்யின் திரையுலக பயணம் குறித்தும் நிகழ்ச்சி இருக்கிறது. மேலும், சில ஆச்சரியங்களும் இருக்கின்றன” என்று தெரிவித்தார்கள்.

mersal vijay

இவை அனைத்தையும் கடந்து, விஜய் என்ன பேசவுள்ளார் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.ஏனென்றால் சமீபத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய் குரல் கொடுத்தது அனைவரது வரவேற்பைப் பெற்றது. மேலும், விஜய் ரசிகர்களால் சமூக வலைதளத்தில் சர்ச்சையும் உண்டாகியுள்ளது. இன்று தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி விஜய் ஏதாவது பேசுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Response