‘மெர்சல்’ படம் ட்விட்டரில் சாதனை!

mersal1

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் 100-வது படமாக உருவாகி வரும் ‘மெர்சல்’ திரைப்படத்தை பல்வேறு வகையில் விளம்பரப்படுத்தி வருகிறது. தற்போது ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைப்பை வைத்து ட்விட்டரில் எமோஜி உருவாக்கியுள்ளார்கள்.

தென்னிந்திய படங்களில் முதல் ட்விட்டர் எமோஜி கொண்ட படம் ‘மெர்சல்’ என சாதனை புரிந்துள்ளது. இதனை ட்விட்டர் தளத்தில் #Mersal அல்லது #மெர்சல் என டைப் செய்தால் எமோஜியோடு ட்வீட் ஆவது போன்று உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் சமூகவலைத்தளத்தில் அனைவரது பார்வையும் இப்படத்தை நோக்கியே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 20-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் ட்வீட் செய்யும் அனைவருடைய ட்வீட்டும் எமோஜியோடு இடம்பெறும். இதன் மூலம் மிகப்பெரிய விளம்பர யுக்தியை ‘மெர்சல்’ படக்குழு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது.

தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ள ‘மெர்சல்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. இறுதிக்கட்டப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

Leave a Response