மேற்கு ஆப்பிரிக்காவில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 300 பேர் பலி!

nilacharivu
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 600 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சியாரோ லியான் நாட்டில் கடுமையான மழை பெய்ததால் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மண்ணில் புதையுண்டன. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 600 பேரைக் காணவில்லை என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்த நிலைமையை சீராக்க அந்நாட்டு அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a Response