சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ தெலுங்கு உரிமை 80 கோடி ?

robot-story_647_112216090847 (1)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ‘2.0’ படத்தின் தெலுங்கு உரிமை சமீபத்தில் விற்கப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு தெலுங்கு பேசும் மாநிலங்களில் படத்தை வெளியிடும் உரிமையை சுமார் 80 கோடி வரை விற்றுள்ளார்கள் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தை தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக படமாக்குவதாகவும், மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படுவதாக மட்டுமே தகவல் வெளியாகியுள்ளது. அப்படியிருந்தால் இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை 80 கோடி வரை விற்கப்பட்டுள்ளது மிகப் பெரும் விலையாகும். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு சில காட்சிகளை மட்டுமே தமிழில் எடுத்த ‘பாகுபலி 2’ படத்தின் தமிழ்நாடு உரிமை கூட சுமார் 47 கோடி வரைதான் விற்கப்பட்டது.

அப்படியிருக்க ‘2.0’ படம் அவ்வளவு விலைக்கு விற்கப்பட்டுள்ளது திரையுலகத்தினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் இந்திய மொழி சாட்டிலைட் உரிமைகள் 110 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது. 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் ‘2.0’ படம் அதை விட அதிகமாக வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் இப்போதே 190 கோடி வந்துவிட்டது. மற்ற உரிமைகளின் வியாபாரமும் தற்போது நடந்து வருகிறது.

Leave a Response