மூன்றாவது டெஸ்ட்! வெற்றி வாய்ப்பில் இந்திய அணி

sl-vs-ind

இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டு ‘பாலோஆன்’ ஆனது. கேப்டன் சன்டிமால் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 19 ரன் எடுத்து இருந்தது. கருணாரத்னே 12 ரன்னும், பிஷ்பக்குமாரா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 333 ரன் தேவை. கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இலங்கையின் 2-வது விக்கெட் விழுந்தது. கருணாரத்னே 16 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து பிஷ்பக்குமாரா, குஷால் மெண்டீஸ் அடுத்தடுத்து சமி பந்தில் ஆட்டம் இழந்தனர். தற்போது வரை இலங்கை அணி 138 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது.

இந்த டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்டில் 304 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் 53 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருந்தது.

இந்த டெஸ்டில் வெற்றி பெறுவதன் மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றும் என எதிர்பாக்கப்படுகிறது.

Leave a Response