எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்திருக்குமா?

sikaram

1955-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம் அளந்து பார்க்கப்பட்டது. அந்த அளவுகளின் படி, சிகரம் 8,848 மீட்டம் உயரம் கொண்டது என குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2015-ல் நேபாளத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரும் மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே எவரெஸ்ட்டை மீண்டும் அளக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய நில அளவியல் துறை தலைவர் வி.பி. ஸ்ரீவத்சவா கூறியுள்ளார். இப்பணியில் இந்தியாவுடன் இணைந்து நேபாள் அரசு செயல்பட ஒப்புக் கொண்டுள்ளது.

டோக்லான் எல்லை பிரச்சனை காரணமாக அளக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அளப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் கொண்டு செல்ல வேண்டியுள்ளதால், ஷெரப்பா மலை வாழ் மக்களின் உதவியை நாடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response