‘பொதுவாக எம்மனசு தங்கம்’ சினிமா விமர்சனம். வசனங்களில் இருக்கிறது காமெடிக்கான கேரண்டி!

Podhuvaga-En-Manasu-Thangam-movie-23

நம்மால ஊருக்கு நல்லது நடக்கணும்னு நினைக்கிற தங்க மனசுக்கார ஹீரோவுக்கு, நாம காதலிச்சா ஊருக்கு நல்லது நடக்கும்’கிற வாய்ப்பு வாசல் திறக்குது. அப்புறமென்ன.. உள்ளே புகுந்துட வேண்டியதுதானே?

புகுந்தால் நிலவரம் கலவரம் ஆகத்தானே செய்யும்? என்ன நிலவரம்,எந்த மாதிரி கலவரம் என்பதைக் காட்ட கிராமம், காதல், ஊர்ப் பஞ்சாயத்து, லோக்கல் அரசியல், திருவிழாவையெல்லாம் அள்ளிப் போட்டுக் குலுக்கியிருக்கிறார், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தளபதி பிரபு!

உதயநிதி கிராமத்து இளைஞனாக நடிக்கும் முதல்படம். அழகான சிரிப்பு, அலட்டிக் கொள்ளாத நடனம், அசடு வழியும் காதல் என ரெகுலர் பார்மெட்டில் இறங்கிக் குத்தியிருக்கிறார். கூடவே சூரியையும் சேர்த்துக் கொண்டதால் காமெடி டிராக்கில் கலகலப்பு அதிகம்!

அநியாயத்துக்கு விளம்பரப் பிரியர் அவர். அநியாயம் செய்வதிலும் கொள்ளைப் பிரியம் அவருக்கு. இப்படியொரு கேரக்டரில் பார்த்திபன். கேரக்டர் என்னவோ வில்லன் தான், அதை ஹீரோ ரேஞ்சுக்கு செய்திருப்பதுதான் ஹைலைட்!

காட்சிகளில் தொய்வுகள் இருந்தாலும் சிரிப்பதற்கான கேரண்டியை வசனங்கள் தந்து விடுகின்றன!

‘சிங்கக்குட்டி…” பாட்டில் இமான் இசை இனிமை.

கிராமத்து அழகை அள்ளிக் கொண்டு வந்து கண்களில் நிறைக்கிறது பாலசுப்ரமணியெமின் ஒளிப்பதிவு!

காமெடி பிரியர்களை உதயநிதி – பார்த்திபன் – சூரி கூட்டணி ஏமாற்றவில்லை!

Leave a Response