ரத்தம் சுரக்கணுமா? பாலில் ஊறிய பைனாப்பிள் சாப்பிடுங்க!

anaa
பழங்களில் சுவையான பழமான அன்னாசியில் “வைட்டமின் பி” உயிர்சத்து அதிக அளவில் உள்ளது.
இது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும்.

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொள்ளவும், பின்னர் அதனை தினமும் படுக்கச் செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைக்கவும்.

பின் படுக்கச் செல்லும்போது ஊறிய வற்றல்களை சாப்பிட வேண்டும். இப்படி 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். புது ரத்தம் சுரக்கும்.

Leave a Response