அடேங்கப்பா… கொத்தமல்லியில் இத்தனை நன்மையா?

Coriander-leaves
1. கொத்தமல்லியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு மென்று தின்றால் உடல் சூடு குறையும். நன்கு பசி எடுக்கும்.
2. கொத்தமல்லியோடு சிறிது மஞ்சள், மிளகு சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் குளிர்க்காய்ச்சல் குணமாகும்.
3. கொத்தமல்லியுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள் தீரும்.
4. கொத்தமல்லி சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால், கொழுப்பு குறையும். ரத்த அழுத்தம் சீராகும்.
5. கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
6. கொத்தமல்லிச் சாற்றில் பெருஞ்சீரகம், ஓமம் இரண்டையும் ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் உணவுக்கு முன் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
7. கொத்தமல்லியோடு உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வாந்தி ஏற்பட்டு, அதிகப்படியான கபம் வெளியேறும்.
8. கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்து, தேன் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 30 மி.லி, அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
9. கொத்தமல்லியை, நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி, வீக்கம் மற்றும் கட்டிகள் மீது கட்டினால் அவை சீக்கிரம் குணமாகும்.
10. கொத்தமல்லிச் சாற்றில் சுக்கை இழைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைபாரம், தலைவலி குணமாகும்.
11. கொத்தமல்லிச் சாற்றில் சந்தனப் பொடி குழைத்துப் பற்றுப்போட்டால் பித்தத்தால் ஏற்படும் தலைவலி சரியாகும்.
12. கொத்தமல்லியோடு சந்தனம், நெல்லிவற்றல் சேர்த்து தண்ணீரில் ஊறவைத்துக் குடித்தால் தலைச் சுற்றல் குணமாகும்.

-சித்த மருத்துவர் AadhavanSiddhashram அருண் சின்னையா

Leave a Response