அதிமுகவில் அதிரடி திருப்பம்…. இனி டிடிவி. தினகரன் டம்மியா!

TTVEPS_Liveday2 (1)
அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் இன்று கட்சியின் தலைமையகத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதில், டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் அதிமுகவை கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டிடிவி தினகரனை துணைப்பொதுச்செயலாளராக நியமித்ததே அதிமுக சட்டவிதிகளுக்கு எதிரானது என்றும் அதனை தொண்டர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பொழுது புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்படும் வரை மட்டுமே சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் என்றும் அசாதாரண சூழல் காரணமாக அவர் செயல்படாமல் போன நிலையில் கட்சியை பிளவுபடாமல் காக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த தீர்மானத்தில் முதல் கையொப்பமிட்டுள்ளார். மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உட்பட 27 பேர் இந்த தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response