அமெரிக்கா தேடும் குற்றவாளி புதிய கட்சி துவங்கியுள்ளார்….

GJHJ
ஜமாத் உத் தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். இவர் மும்பை தாக்குதல் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இந்தியா அவரை தேடப்படும் குற்றவாளி பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்காவும் அவரது தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் விலை நிர்ணயித்துள்ளதாம்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வீட்டுச்சிறையில் சயீத் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஹபீஸ் சயீத் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் அரசியல் கட்சி ஒன்றை துவங்கி அதை பாக்., தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சிக்கு ‛மில்லி முஸ்லீம் லீக் பாகிஸ்தான்’ என்ற பெயரை வைத்துள்ளார்.

Leave a Response