ஆரவ் காலை வாரியதால் ஓவியாவுக்கு தண்டனை !

Oviya
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது புதிய பங்கேற்பாளராக பிந்துமாதவி வந்துள்ளார், இவர் மற்ற பங்கேற்பாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்தார். இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்தவர் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் கூறினார்.

இந்த முதல் டாஸ்க்கில் காயத்ரியும் மற்றும் சக்தியும் பங்கேற்றனர், இதில் சக்தி தோல்வி அடைந்தார். இரண்டாவது டாஸ்க் வையாபுரியும், கணேஷ் வெங்கட்,மற்றும் சினேகன் இதில் சினேகன் தோல்வி அடைந்தார். மூன்றாவது டாஸ்க்கு ஓவியா மற்றும் ஜூலிக்கு. இந்த டாஸ்க்கில் முடிவை அறிவிக்கும் வாய்ப்பை மற்ற பங்கேற்பாளர்களிடம் கொடுத்தார். இந்த நிலையில் ஓவியாவுக்கும் ஜூலிக்கும் ஒரே அளவு வாக்குகள் கிடைத்த நிலையில் ஆரவ்வின் வாக்குதான் வெற்றியாளரை முடிவு செய்யும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் ஆரவ், ஓவியாவின் காலை வாரி, ஜூலிக்கு வாக்களித்ததால் ஓவியா தோல்வி அடைந்தார். எனவே ஓவியாவுக்கு பிந்து தண்டனை கொடுத்தார். டாஸ்க்கில் வேண்டுமானால் ஓவியாவை தோற்கடிக்கலாம், ஆனால் நிஜத்தில் ஓவியாதான் வெற்றி பெறுவார் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.

Leave a Response