⁠⁠⁠தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்தாகுமா? இன்று முடிவு தெரியும்?

neet exam

‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்’ என்று ஏற்கனவே சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

இது விஷயமாக ஏற்கனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் இரண்டு முறை டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்கள்.

vijabaskare

அதன் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை 8 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து நீட் தேர்வு விஷயமாக பேசி, பின்னர் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற முயற்சிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எப்படி தமிழகத்துக்கு சாதகமான தீர்வு கிடைத்ததோ அதேபோல் நீட் தேர்வு விஷயத்திலும் இன்றோ அல்லது நாளையோ தமிழ்நாடு எதிர்பார்க்கிற நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது!

Leave a Response