பாடை கட்டி விவசாயிகள் போராட்டம்!

farmers

கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் நேற்று 15-வது நாளாக நீடித்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நூதன முறையில் போராட்டம் நடத்தி வரும் அவர்கள், நேற்று பாடை கட்டி ஊர்வலம் நடத்தினார்கள்.

பாடை கட்டி அதில் ஒருவரை படுக்க வைத்து, சிறிது தூரம் ஊர்வலமாக தூக்கிச் சென்று விட்டு திரும்பினார்கள்.

பின்னர் அய்யாக்கண்ணு கூறுகையில், “தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாளும் நூதனமான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம்” என்றார்.

Leave a Response