அதிக மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் !

van
சென்னை கொளத்தூர், பெரம்பூர், செம்பியம், மூலக்கடை உள்பட பல்வேறு பகுதிகளில் தனியார் பள்ளி வாகனங்களை சரியாக பராமரிப்பது இல்லை என்றும், விதியை மீறி அதிக மாணவர்களை ஏற்றிச்செல்வதாகவும் கொளத்தூரில் உள்ள வடக்கு மோட்டார் வாகன அலுவலகத்துக்கு ரகசிய புகார்கள் வந்தன. இதையடுத்து, மோட்டார் வாகன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தன், ஜெயலட்சுமி ஆகியோர் மேற்கண்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், அதிக மாணவர்களை ஏற்றி வந்தது, தகுதி சான்றுகள் இல்லாமை மற்றும் அதிக வேகத்தில் வந்த 9 தனியார் பள்ளி வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மோட்டார் வாகன அலுவலர்கள் கூறுகையில், பள்ளி வாகனங்களில் அதிகளவில் மாணவர் களை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்பேரில், அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Response