தமிழகத்தில் இனி வந்தே மாதரம் பாடல் கட்டாயம் !

school
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கில் நீதிபதி எம்.வி.முரளிதரன், வந்தே மாதரம் முதலில் வங்க மொழியில் இயற்றப்பட்டதா, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா என பதிலளிக்கும்படி தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கினாலும் அவர் தேர்ச்சியடைய மாட்டார் எனவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வந்தே மாதரம் பாடலை அனைத்து கல்வி நிலையங்களிலும் கட்டாயம் பாட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வாரத்திற்கு ஒரு முறை வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
school2
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்க மொழியிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ பாட விருப்பமில்லாத பட்சத்தில் தமிழில் மொழி பெயர்த்து பாடலாம் என்றும் ஹைகோர்ட் கூறியுள்ளது.

வந்தே மாதரம் பாடலை பாட விருப்பம் இல்லாதவர்களை பாடுமாறு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றும் கோர்ட் கூறியுள்ளது. விருப்பமில்லாதவர்களை பாடுமாறு அழுத்தம் கொடுத்தால் அவர்களுக்கு நாட்டின் மீது வெறுப்பு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

Leave a Response