இந்திய விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு “அல்ட்ராசோனிக் ட்ரையர்”!

altra
அமெரிக்காவின் டென்னிசிலுள்ள ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் ஆய்வுப்பணியில் இருக்கும் விரால் படேல், தனது குழுவுடன் இணைந்து துணிகளை மிக வேகமாக உலர வைத்து அதனை அயர்ன் செய்யவும் கூடிய ‘அல்ட்ராசோனிக் டிரையர்’ எனும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். நாம் தற்போது சாதரணமாக துணியை சலவைச் செய்து, காய வைத்துப் பின்னர் அயர்ன் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட, ஐந்து மடங்கு வேகமாக இந்த ட்ரையர் நேரத்தை மிச்சப்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விரால் பேசும்போது:-

இது முற்றிலும் புது வகையான முறையில் வேலைசெய்யக் கூடியது. பொதுவாக ட்ரையர்கள் துணியில் இருக்கும் ஈரத்தை நீராவியாக மாற்றி துணிகளை உலரச்செய்யும். ஆனால் இந்த அல்ட்ராசோனிக் இயந்திரம், வெப்பம் இல்லாமல் துணிகளில் உள்ள ஈரத்தை உறிஞ்சி எடுக்கும் வகையில் உருவக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆடையில் உள்ள தண்ணீரை ஈர்க்கும் வகையில் அதிர்வலைகளை இந்த இயந்திரம் உருவாக்கும். அதன் மூலமாக நீர் மொத்தமாக ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு பின்பு உறிஞ்சி எடுக்கப்படுகிறது. வணிக ரீதியாக சில மாற்றங்களை செய்த பிறகு, இரண்டு முதல் ஐந்து வருடங்களுக்குள் நுகர்வோர் பயன்பாட்டுக்கு இந்த ட்ரையர் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response