“உறுதி கொள்” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகனுக்கு எச்சரிக்கை விடுத்த மன்சூரலிகான்!

uruthi
APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ” உறுதி கொள்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை இயக்குனர் R.அய்யனார் எழுதி இயக்கியுள்ளார். இவர் நெடுஞ்சாலை படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது:-

“தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு. அது தான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி காரங்க ஏதோ படி அளக்கிறாங்க. அவங்க கஷ்டம் தீரட்டும். பரவாயில்லை. ஆனால் கமல் மாதிரி சாதனை கலைஞர் இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருக்கக் கூடாது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் மாலை காட்சி, இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட். அதே நிகழ்ச்சி மறு நாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட். நாளை கமல் படம் வெளிவரும் போது அஜித்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்த என்னவாகும் என்று அவர் யோசிக்க வேண்டும்!” என்றார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றதில் இருந்து, பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்கள் பலரின் எண்ணவோட்டமாக இருக்கிறது. இதை கமல் புரிந்துகொள்வாரா? இவ்வாறு மன்சூரலிகான் பேசினார்.

இந்த விழாவில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றனர். விழாவுக்கு வந்தவர்களை தயாரிப்பாளர்கள் அய்யப்பன், பழனி, இயக்குனர் அய்யனார் வரவேற்றனர். முனீஸ்காந்த், அபிசரவணன், இசையமைப்பாளர் சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Response