கௌதம் கார்த்திக்கை அடுத்த வெற்றிக்கு கொண்டு சென்ற ‘இவன் தந்திரன்’ – விமர்சனம்…

ivan review
2012ஆம் ஆண்டு ‘கடல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன நடிகர் கௌதம் கார்த்திக், 5 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாதம் வெளியான ‘ரங்கூன்’ படத்தின் மூலம் தான் தன் முதல் வெற்றியை எட்டியிருக்கிறார். அந்த வெற்றியை தக்கவைத்துக் கொண்டு, சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் பிடிக்க அவருக்கு இன்னும் பல வெற்றிகள் தேவை. ‘கண்டேன் காதலை’ ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என தொடர்ந்து இயக்கிய இயக்குனர் கண்ணன் அவர்களுக்கு அந்த படங்களெல்லாம் தோல்வியடைய வைத்துள்ளது, ஆதல்லால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்கிற நிலையில் ‘இவன் தந்திரன்’ திரைப்படத்தை இயக்கியது மட்டுமன்றி தயாரிக்கவும் செய்துள்ளார் இயக்குனர் கண்ணன். கண்ணன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவருக்குமே தங்கள் கேரியரில் ‘இவன் தந்திரன்’ முக்கியமான படமாக இருந்தது.

இந்த படத்தில் எஞ்சினீயரிங்க் முடித்துவிட்டு ரிச்சி தெருவில் மொபைல், கம்ப்யூட்டர் மற்றும் மின்னணு சாதன பொருட்கள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள் கௌதம் கார்த்திக்கும் அவரது கல்லூரி நண்பரான ஆர்‌.ஜே.பாலாஜியும். அது போக, மின்னணு மற்றும் அலைபேசி உதிரி பாகங்களை வைத்து புதிது புதிதாக சாதனங்கள் கண்டுபிடிப்பதிலும் ஹாக்கிங்கிலும் ஆர்வம் கொண்டவர் கௌதம் கார்த்திக். ஒரு கட்டத்தில் ஒரு மோசமான அரசியல்வாதியோடு பிரச்சினை ஏற்படும்பொழுது, அவரோடு நேரடியாக மோத முடியாத கௌதம் தனது கம்ப்யூட்டர் மூளையைக் கொண்டு எப்படி மறைமுகமாக மோதுகிறார்? அதில் அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பதே இந்த ‘இவன் தந்திரன்’ படத்தின் கதைச் சுருக்கம்.

சமுதாயத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு பிரச்சினையை கையில் எடுத்து, அதை கம்ப்யூட்டர், பக், ஹாக்கிங் என ஹைடெக் வர்ணம் பூசி ஒரு ஜனரஞ்சகமான பொழுதுப்போக்கு திரைப்படமாக கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் கண்ணன். கல்வி எந்த அளவிற்கு வியாபாரம் ஆகிவிட்டது, அதை வைத்து என்னவெல்லாம் அரசியல் விளையாட்டு நடக்கிறது, இதனால் எப்படி சாமானியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், சாதாரண ‘ஆரம்பப் பள்ளி’ சேர்க்கைக்கே லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டிய அவலம் ஏன் ஏற்பட்டுள்ளது என பல சீரியஸான விஷயங்களை பேசியுள்ளது இந்த திரைப்படம். ரொம்ப சீரியஸாக டாக்குமெண்டரியைப் போல் காட்டிவிடாமலும், பிர தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கல்வி கொல்லை, கல்வித்துறையின் ஊழலால் ஆகியவற்றை ஜனரஞ்சகமான, திரைக்கதையை எழுதி இயக்கிய இயக்குனர் R. கண்ணன் உண்மையிலேயே இப்படத்தின் மூலமாக ஜெயத்துவிட்டார்.

மேலும் இப்படத்தில் தான் கௌதம் கார்த்திக், தன் தந்தையை போல் குரல் வளத்திலும், வசன உச்சரிப்பிலும் ரசிகர்களை கவரும் விதத்திலும், ஈர்க்கும் விதத்திலும் நன்றாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமிபத்தில் சூரியாவின் சகோதரர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “காற்று வெளியிடை” படத்தில் சரியான கதாப்பாத்திரம், மற்றும் வசனங்களும் அமையாத R.J. பாலாஜிக்கு, இப்படத்தில் கதாநாயகன் கௌதம் கார்த்திக்குடன், அவரது நண்பனாக படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை அவருடனே கதை முழுவதும், பயணிக்கிறார். பெரும்பாலான படங்களில் நடிக்கும் R.J.பாலாஜி எல்லோரையும் கலாய்ப்பாதாகவே இருக்கும். ஆனால் இந்த படத்தில் இயக்குனர் R.J. பாலாஜிக்கு நல்ல கதாப்பாத்திரம் வடிவமைத்து கருத்துள்ள வசனங்களை புகுத்துள்ளர்.

கௌதம் கார்த்திக்கும், R.J. பாலாஜிக்கும், இப்படத்தை இயக்கிய இயக்குனர் R, கண்ணன் ஆகிய முவருக்கும் இப்படத்தின் வெற்றிகள் ஒரு ஏணி என்றுதான் சொல்ல வேண்டும். கதாநாயகியாக நடித்துள்ள ஷ்ரதா ஸ்ரீநாத் தன்னுடைய பங்குக்காக அவரது நடிப்பை சிறப்பாக காண்பித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் சண்டை பயிற்சி இயக்குனர், சூப்பர் சுப்புராயன் தன்னுடைய இயல்பான நடிப்பு மூலமாக நவரச நாயகன் மற்றும் இளையதிலகம் நடித்த பழைய அக்னி நட்சத்திரம் படத்தில் வில்லனாக நடித்த திரு உமாபதி அவர்களை நினைவு படுத்துகிறார்.

இப்படத்திற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். s.s தமன் இசையமைத்துள்ளார், எடிட்டிங் R.K. செல்வா, சண்டைப்பயிற்சி ஸ்டன்ட் செல்வா, இப்படத்தின் தயாரிப்பு R.கண்ணன் மற்றும் S.K. ராம் பிரசாத் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தை கிரியேடிவ் என்டர்டைனர்ஸ் மற்றும் distributers G.தனஞ்செயன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

Leave a Response