மதுரையில் இன்று எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா துவக்கம்!

mgr
தமிழக அரசு சார்பில் மதுரையில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க இன்று காலை 11 மணிக்கு மதுரை செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 4 இடங்களில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விழா நடைபெறும் அரங்கில் செய்தித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எம்ஜிஆர் நினைவு புகைப்படக் கண்காட்சியை முதல்வர் திறந்து வைக்கிறார்.

மதுரை கேகே நகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ள விழாவில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிக்காக பாண்டி கோயில் மைதானத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்விழாவின் பாதுகாப்பு பணியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இவ்விழாவில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response