இனி டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்கள்!..

delhi-metro-pti_19323
அக்டோபர் மாதம் முதல் டில்லி மெட்ரோவில் டிரைவர் இல்லா ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

முதலில், டிரைவர் இல்லாத ரயில்கள் ஜூன் மாதம் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது அக்டோபர் மாதம் முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்காஜி – தாவரவியல் பூங்கா இடையேயான 13 கி.மீ., ஜானக்புரி மேற்கு – இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம் இடையேயான 10 கி.மீ., ஆகிய 2 வழித்தடங்களில் முதல் கட்டமாக இந்த டிரைவர் இல்லா ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அக்டோபர் 2017 மற்றும் மார்ச் 2018 என இரு பகுதிகளாக இந்த திட்டம் துவக்கப்பட உள்ளது. மார்ச் 2018 முதல் முழுவதுமாக டிரைவர் இல்லா ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response