முதல்வர் திறந்து வைத்த போரூர் எம்.ஜி.ஆர். மேம்பாலம்….

porur
சென்னை போரூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 480 மீட்டர் நீளம், 372 மீட்டர் அகலம் கொண்டது. இது மவுண்ட் – பூந்தமல்லி, ஆற்காடு, பெங்களூரு நெடுஞ்சாலைகளை இணைக்கும். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், போரூர் மேம்பாலம் பல்வேறு இடர்பாடுகளுக்கு பின்னர் திறந்து வைக்கப்பட்டது.

நிலம் கையகப்படுத்தப்படாமல் திமுக ஆட்சியில் திட்டம் தொடங்கப்பட்டது. நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்ததால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. 2010ல் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பாலம், ரூ.54 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வாறு முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார். இதையடுத்து வாகன ஓட்டிகள் பாலத்தில் பயணிக்கத் தொடங்கினர்.

Leave a Response