வனமகன்- விமர்சனம்

vanamagan-review
இப்படத்திற்கு இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்கள் வனமகன் என்று பெயர் வைக்க காரணம் மலை அடிவாரங்களில் வசிக்கும் மக்கள் படும் இன்னல்கள் மற்றும் அவலங்களை வைத்து இப்படத்தை படமாக்கியுள்ளார்.

வாசி (ஜெயம் ரவி) தனது உலகமே வனம் தான் என்று இருந்து விடுகிறார். வெளி உலகம் அவருக்கு தெரிவதில்லை. தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை. அதுபற்றி லட்சியம் செய்வதும் இல்லை. ஒரு முறை அவர் நகரத்திற்கு வரும்போது, அனைத்துமே அவருக்கு புதிதாக தெரிகிறது. ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால், அந்த நகரத்தில் காவ்யாவை (சாயிஷா) பார்த்தவுடன் காதலில் விழுந்து விடுகிறார். காவ்யா வசிக்கும் வீட்டிலேயே வாசியும் வசிக்கிறார். இவர்களுக்கு இடையிலான உறவு இறுக்கமாகிறது. காவ்யாவின் தந்தையான பிரகாஷ் ராஜ்க்கு இவர்களது இறுக்கம் பிடிக்கவில்லை. எப்படியாவது வாசியிடம் இருந்து காவ்யாவை பிரித்து விட வேண்டும் என்று தந்தை பிரகாஷ் ராஜ் முயற்சிக்கிறார். ஆனால், இந்தப் போட்டியில் வாசி தான் வெற்றி பெறுகிறார். எப்படி அவர் காவ்யாவை வெற்றி கொள்கிறார் என்பதுதான் மீதக் கதை.

கதை தொடர்ந்து சென்று கொண்டு இருக்கும்போது அடுத்தடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதை எளிதில் அறிந்து கொள்ள பார்க்கும் அனைவருக்கும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. படத்தில் இடம் பெற்றிருக்கும் நகைச்சுவையும், திறம்பட கையாண்டு இருக்கும் காட்சிகளும் படத்தை பார்ப்பவர்களுக்கு நல்ல பிரேக்கிங் கொடுக்கிறது. இந்தப் படம் சாயிஷாவின் முதல் படமாக இருந்தாலும் அவரின் நடிப்பு நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது. இந்தப் படம் அவரது நடிப்பிற்கு உதாரணமாகத் திகழ்கிறது. ஜெயம் ரவிக்கு இந்தப் படத்தில் பேசுவதற்கு வாசனைகள் இல்லை என்றாலும் ஒரு மலைவாழ் மக்களின் வசனங்கலான (அ, உ) என்று அவர்களுள் பேசிக்கொள்ளும் முறையை நன்றாக கற்றுள்ளார் நம் ஜெயம் ரவி.

குறிப்பாக இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு வித்தியாசமாகவும் அசத்தலாகவும் அமைந்துள்ளது. இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வேண்டிய படம் வனமகன்.

Leave a Response