நீண்ட நாட்களுக்கு பிறகு பாடலில் களமிறங்கிய கங்கை அமரன்…

gangai_amaran_1_14269
துள்ளலான தொலைக்காட்சித் தொகுப்பாளராகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஸ்ரேயா ரெட்டி, ‘திமிரு’ படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தார். இவர் விக்ரம் கிருஷ்ணாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். மீண்டும் இவர் “அண்டாவ காணோம்” எனும் படத்தில் நடித்துள்ளார். இது இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் படமாகும்.

அவருடன் புதுமுகங்கள் இளையராஜா, சார்வி லஸ்யன், வினோத் முன்னா, அருண் பிரஜித், ஷரவண சக்தி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் சார்பில் ஜே சதீஷ்குமார் தயாரிப்பில், சி வேல்மதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் இந்த “அண்டாவ காணோம்” இப்படத்தின் ஒற்றைப் பாடல் ஒன்று இன்று வெளியாகியுள்ளது.

இப்பாடலுக்கு தனிச்சிறப்பு என்னவென்றால் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பாடியிருப்பது தான். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அண்டாவின் பங்கு என்னவென்பதைச் சொல்லும் இந்தப் பாடலை மதுரகவி எழுத, அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் தனது சமூக வலைத் தளத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த பாடலை வெளியிட்டுள்ளார்.
https://youtu.be/rbbGuWzsPpI

Leave a Response