மாணவ, மாணவிகளுக்கு இலவச வைஃபை தேவையா…

free-wifi1
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இனி மாணவர்களுக்கு இலவசமாக வைஃபை வசதி செய்து தரப்படும் என்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தமிழக சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது போன்று இலவச வைஃபை மூலம் மாணவ, மாணவிகள் படிப்பார்களா? இல்லை படிக்கும் எண்ணம் தான் வருமா?? இந்த இலவச வைஃபை சேவையை11’ம் மற்றும் 12’ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் உபயோகிப்பார்கள் என்று திட்டவட்டமாக நம்ப முடியுமா? மாணவர்களின் நலன் கருதி தமிழக கல்வி அமைச்சர் மாணவர்களுக்காக இந்த இலவச சேவையை அறிவித்துள்ளார். ஆனால் மாணவர்கள் படிப்பை தவிர்த்து தேவையற்ற காரங்களுக்கு பயன்படுத்த மாட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

கரணம் இன்றைய தொலைத்தொடர்பு பரிமாண வளர்ச்சிகளில் வேறு பல நிறுவனகள் இலவச இன்டர்நெட் மற்றும் குறைந்த விலையில் டேட்டா சேவையை வழங்கி வரகின்றனர். இதை உபயோக படுத்தி பல மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பாகுபாடின்றி சட்டத்துக்கு புறம்பான தேவையற்ற பார்ன் சைட்டுக்குள் சென்று நேரத்தை கழிக்கின்றனர்.

இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த மாணவர்களுக்கு இலவச வைஃபை சேவை வழங்கினால் அவர்கள் தவறான பாதையில் செல்லாத அளவுக்கு கட்டுபடுத்தும் விதமாக, அவரகளுக்கு கொடுக்கப்படும் இலவச வைஃபை சேவை கல்வி பயன்பாட்டிற்கு உபயோகமாக இருக்கும் வகையில் இந்த இலவச வைஃபை மாற்றி அமைக்கப்பட்டு வழங்கப்பட்டால் பயனுள்ளதாக அமையும்.

Leave a Response