ஜூலை 27ல் ‘விவேகம்’ இசை வெளியீடு…

aniruth 2
‘சிறுத்தை’ படத்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து வரும் படம் தான் ‘விவேகம்’. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பல புதிய சாதனைகளைப் படைத்தது.

அதற்கடுத்து கடந்த வாரம் ‘சர்வைவா’ என்ற பாடலின் 25 வினாடி டீசர் மட்டும் வெளியானது. இந்த டீசரும் அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனால் இப்படத்தின் இசை வெளியீட்டை விரைவாக நடித்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர். ஜுலை 27ம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் படம் போல இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் பாடல்களிலும் மேற்கத்திய இசை அதிகம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

Leave a Response