பெண்ணை அறைந்தாள் தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வா…

pandiyarajan
திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை போராட்டத்தின் போது பெண்ணை தாக்கி, உயர்நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளான திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் அருகே சாமளாபுரம் அய்யன்கோயில் சாலையில், புதிதாக டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரம் நான்குசாலையில் கடந்த ஏப்ரல் மாதம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் தாக்குதல் நடத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணின் மீது பாண்டியராஜன் ஓங்கி அறைந்ததால் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பின்னர் அந்த பெண்ணிற்கு என்னவையிற்று என்று தனியார் தொலைக்கட்சி நிருவனங்களும் கண்டு கொள்ளவில்லை அவரை அடித்த காவல் துறையினரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் அண்மையில் திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு ஈரோடு அதிரடிப்படை எஸ்பியாக பதவி உயர்வி அளித்துள்ளது நம் தமிழக அரசு.

மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதால் இந்த பதவி உயர்வு அவர்க்கு தேவையா, இது நியாயமா தமிழக அரசு அந்த பெண்ணிற்கு நடந்த கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Response