ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.
3 விதமான தோற்றங்களில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் சிம்பு. 3 தோற்றங்களில் ‘மதுரை மைக்கேல்’ தோற்றம் மட்டும் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. ‘அஸ்வின் தாத்தா’ தோற்றம் சமீபத்தில் நடைபெறவிருந்த தாய்லாந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அக்காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிகைகள் ஸ்ரேயா, தமன்னா இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
இப்படத்தை இரண்டு பாகமாக வெளியிடுவதால் ‘மதுரை மைக்கேல்’ தோற்றம் மற்றும் ‘அஸ்வின் தாத்தா’ தோற்றம் மட்டும் கொண்ட முதல் பாகம் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு
அறிவித்துள்ளார்கள். இதற்கிடையில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு நேற்று நடைபெற்ற தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால்ஏற்கெனவே திட்டமிட்டபடி ‘ஏஏஏ’ படம் ரிலீஸாவது உறுதி என்கின்றனர்.