உரு- விமர்சனம்

uru vimarsanam
தற்போது எடுத்துவரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பட வரிசையில் அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த் இயக்கி, கலையரசன், தன்ஷிகா நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ’உரு’

இப்படத்தில் கலையரசன் பிரபல நாவல் எழுத்தாளறாக நடித்துள்ளார். அவரது மனைவியாக தன்ஷிகா நடித்துள்ளார். சமீபகாலத்தில் கலையரசன் எழுதிய கதைகள் எல்லாம் பழைய பாணி கதைகளாக அமைந்துவிட, அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் எப்போதுமே டிரெண்டாக இருக்கும் ‘பயம்’ என்ற கான்சப்ட்டை வைத்து ஒரு வித்தியாசமான ஹாரர் கதையை எழுத விரும்புகிறார். அதற்க்கு அவர் ஒரு அமைதியான இடம் வேண்டும் என்பதற்காக மேகமலை எனும் இடத்திற்கு பயனிகிறார் கலையரசன். மேகமலையிலுள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார் கலையரசன்.

அந்த பங்களாவில் சில அமானுஷ அனுபவங்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் கலையரசனை சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவாகிறது. அந்த சூழலில் தன்ஷிகா அவரை தேடி மேகமலை வருகிறார். தன்ஷிகா மேகமலை வந்ததும் கலையரசன் எழுதிக் கொண்டிருந்த கதையில் வருவது மாதிரியான சில அதி பயங்கர அமானுஷ சம்பவங்கள் அங்கு நடக்கிறது. பின்னர் இருவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. அந்த அமானுஷ சம்பவங்களின் பின்னணி என்ன அதில் இருந்து தப்பிக்கிறார்களா என்பதை சொல்லும் கதை தான் இந்த ‘உரு’ படம்.

மேலும் இப்படத்தில் மைம் கோப்பி, டேனியல், தமிழ் செல்வி, கார்த்திகா, மற்றும் ஜெயபாலன், நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜகன் இசையமைத்துள்ளார், சான் லோகேஷ் எடிட்டிங், மதன் கார்கி – உமாதேவி, பாடல் பாடியுள்ளனர். சண்டைக்காட்சிகள் பிரபு சந்திரசேகர், தயாரிப்பாளர் வி.பி.விஜி,.

இதுக்கு மேலா படத்தை பற்றி கூறினால் உங்களுக்கு பட கதை மீது உள்ள சுவாரசியம் குறைந்துவிடும். மீதி கதை தெரிந்து கொள்ள திரையரங்கம் சென்று பாருங்கள்.

Leave a Response