எடுபடுமா, தினகரனுக்கு சசிகலா சொன்ன அறிவுரை?..

sasikala2
ஜெயலலிதா மறைவடைந்த நிலையில், அவருடன் இருந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றார். பின்பு அவர், முதல்வராகவும் தேர்வு செய்யப்படவிருந்த நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பெங்களூரிவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன், இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறை தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சசிகலாவை, டிடிவி தினகரன், கடந்த 2 வாரங்களில், 2 முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது, கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பை, திறமையாகச் செயல்படும்படியும், ஆட்சியை பழனிச்சாமி பார்த்துக் கொள்ளட்டும் என்றும், சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

இது மட்டுமிமன்றி, தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும், தனியாக கடிதம் ஒன்றையும் சசிகலா எழுதி அனுப்பியுள்ளாராம். அந்த கடிதத்தில், கணவர் நடராஜன், டிடிவி தினகரன் என அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். நமக்குள் சண்டையிடுவதால் பாஜகவுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் பலன் கிடைத்துவிடும். எனவே, ஒற்றுமையாக இருந்து, ஆட்சியையும், கட்சியையும் நாம் காப்பாற்ற வேண்டும், என்று சசிகலா குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்று சசிகலா அறிவுரை கூறினார் யார் கேட்ப்பார்கள் கேட்டாலும் ஆட்சி கலையாமல் இருக்குமா…

Leave a Response