வெள்ளை மாளிகையில் அமைச்சரவை கூட்டம்

drump
தீவிரவாதத்திற்கு நிதி கொடுக்கும் நாடுகளை தடுத்து நிறுத்த பயங்கரவாதம் எனும் மிருகத்தை பட்டினி போட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

தீவிரவாதத்தை ஒழிப்பது பற்றி கத்தாரின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க அதிபர் டொனால் டிரமப்,வெள்ளை மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரரவாதிகளின் அட்டகாசத்தை நாம் வெற்றி கரமாக முறியடித்து விட்டோம். தீவிரவாதத்தை ஒழிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. சில நாடுகள் தீவிரவாதத்தை ஆதரித்தும், அதற்கு தேவையான நிதியும் வழங்கி வருகிறது. இதனை முறியடித்து நிதி கொடுக்கும் நாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.அதன் மூலம் தீவிரவாதம் என்ற மிருகத்தை பட்டினி போட வேண்டும் என்றும்.இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

Leave a Response