ரங்கூன் திரைப்பட விமர்சனம்

rangoon
படம்- ரங்கூன்

இத்திரைப்படத்தில் பர்மாவில் இருந்து சிறு வயதிலேயே அகதியாக வந்து, சென்னை, எண்ணூர் அருகே ,பர்மா நகர் என்கிற அன்னை சிவகாமி நகர் பகுதியில் குடியேறி சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாய் , தங்கை யுடன் சரியான பிழைப்பு இல்லாது கஷ்டப்படும் ஹீரோ, கெளதம் கார்த்திக், கூடவே ஒரு மேல்தட்டு பெண்ணுடன் காதலிலும் விழுகிறார். அதே போன்று , செளகார்பேட்டையில் தங்க பிஸினஸில் கொடி கட்டி பறக்கும் பர்மா சேட்டுடன் தன் விசுவாசத்தாலும், வேலை சாதுர்யத்தாலும், வேலையாளக சேர்ந்து, தங்க கடத்தலிலும் ஈடுபட்டு சிக்கலில் மாட்டுகிறார்.

அதிலிருந்து மீள , நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பெரிய இடத்து குழந்தையை கடத்தி , மேலும் இடியாப்பசிக்கலில் சிக்கும் ஹீரோ , அந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டு வந்தாரா? தன் காதலியின் கரம் பிடித்தாரா.? கெளதம் கார்த்திக்கின் சிக்கல்களுக்கெல்லாம் காரணம் யார்..? என்பது தான் … “ரங்கூன்” படத்தின் கதை.

காட்சிப்படுத்தல் :- பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், கெளதம் கார்த்திக்குடன் சனா எனும் புதுமுகம் ஜோடி சேர ., ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்., ..வந்திருக்கும் “ரங்கூன் “திரைப்படம் பர்மிய அகதிகளால், சென்னை, எண்ணூர் அருகே, பர்மா நகர் என்கிற அன்னை சிவகாமி நகர் உருவான கதை, ஹவாலா பணம் என்பதற்கான விளக்கம், பேருந்து பயணத்தில் பிடிமான கம்பியைத் திருகி நாயகியின் கவனம் ஈர்க்கும் நாயகன்… ஆகிய ரசனையான காட்சிப்படுத்தல்களால் ரசிகனின் கவனம் ஈர்க்கிறது.

கதாநாயகர் :- பர்மா அகதி வெங்கட் ‘அலைஸ்’ வெங்கடேசனாக கெளதம் கார்த்திக, சிறு வயதிலேயே, பர்மாவில் இருந்த மீண்டும் தமிழகம் வந்தவராக, அதிரடி செய்ய முயன்று அதில் பாதி வென்று மிருக்கிறார் .ஆனால், அவரது பால் வடியும் முகத்தோற்றம் குருவி தலையில் பணங்காய் வைத்த கதையாக தொங்கலில் விட்டிருக்கிறது. அதே நேரம், அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இந்தப்படக் கதை அவரது முந்தைய படங்களைக் காட்டிலும் பக்கா மாஸ் என்பது ஆறுதல்!

“பொறக்கறது ஈஸி, சாகறது ரொம்ப ஈஸி ..ஆனா வாழறது ரொம்ப ரொம்ப கஷ்டம்…” என்பதில் தொடங்கி, “ஒரு அகதியா ஆரம்பிச்ச என் வாழ்க்கையில என்னை சேர்ந்தவங்களே எனக்கு செய்தது தான் பெரும் துரோகம் …” என்பதில் தொடர்ந்து, “பலம்ங்கறது இருக்கப் பட்டவன் இல்லாதவனை கீழே மிதிச்சு தள்றதுல மட்டுமில்ல… அதையும் தாண்டி கீழ இருக்குறவன் எழும்பி மேல வர்றான் தெரியுமா … அதுலதான் இருக்கு பலம். ” என்பது வரை, அனைத்திலும் தனது கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார். பேஷ், பேஷ்! .

கதாநாயகி :- “பணம் நிஜம் இல்ல…நிஜம் மாதிரி ” என ஹீரோவுக்கு புரியும்படி “பன்ச் ” பேசும் புதுமுக நாயகி சனா, நடாஷா எனும் கேரக்டரில் அசத்தியிருக்கிறார். இயக்குனர் அப்படியே சிறப்பாகசெய்து, முத்தக்காட்சிகளில், கெளதம் கார்த்திக்கை போன்றே. ரசிகர்களையும் உசுப்பேத்தியிருக்கிறார். ‘வெல்டன் ‘சனா!

வில்லன் :- தங்க வியாபாரி சியா எனும் குணசீலனாக தங்க நகை வியாபாரியாக, வில்லனாக., சித்திக், மிரட்டியிருக்கிறார். “நான் நட்டப்படலாம் ஆனா ,ஏமாறக் கூடாது … ” என்றபடி எல்லோரையும் ஏமாற்றும் அவரது வில்லப் பாத்திரம் தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்லை …. என்றாலும் ரசனையான ஒரு தினுசு … என்பது ஹாசம்!

பிற நட்சத்திரங்கள் :- நேர்மையான போலீஸ் அதிகாரியாக இது நாள் வரை தமிழ் சினிமாவில் தலைகாட்டாத முன்னாள் ஹீரோ ஆனந்த், நட்புக்காக உயிரை விடும் நாயகனின் கேங் நண்பர் மற்றும் மைத்துனர் அத்தோக்குமார் – லல்லு, பணத்திற்காக அதே நட்பை பலி கொடுக்கும் “டிப்டாப் “சசி -டேனியல், ஹெட் கான்ஸ்டபிள் – பிள்ளையார் எனும் மணிவண்ணன், ஹீரோவின்தந்தையாக சில காட்சிகளே வரும் ரென்னிஸ், லஞ்ச லாவண்ய போலீஸாக ‘ சூப்பர் குட்’ சுப்பிரமணி, ஆகிய அனைவரும் அசத்தியிருக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- பிரசன்னாவின் படத்தொகுப்பு பலேதொகுப்பு . அனிஷ் தருண்குமாரின் ஒளிப்பதிவும் அம்சமான அசத்தல் அழகு பதிவு! விக்ரமின் பாடல்கள் இசையும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் மிரட்டல்!

பலம் :- “நம்ம மேல இருக்குறவங்களுக்கு ,நம்ம வேலை பிடிச்சிருந்தா போதும் நாமும் தன்னால் மேல வந்துடலாம் … ” ஆகிய வசனங்கள் இப்படத்திற்கு பலம். . மேலும், “ரங்கூன் ” எனும் டைட்டிலும், சியா சித்திக்கின் நடிப்பும், கதை மற்றும் திரைக்கதையும் பெரும் பலம்.

பலவீனம் :- இப்படி ஒரு கதைக்கு, கெளதம் கார்த்திக்கின் குழந்தை முகம் பெரும் பலவீனம்.

இயக்கம் :- ராஜ்குமார் பெரியசாமியின் எழுத்து, இயக்கத்தில், தமிழ் சினிமாவில் ரவுடிகள், தவறான நபர்கள் மீதே நாயகியருக்கு காதல் வரும் காரணம் புரியாத காரணம் உள்ளிட்ட, ஒரு சில லாஜிக் குறைகள் இருந்தாலும், , “இது வரைக்கும் நான் நல்லவனா கெட்டவனா தெரியாது … இனி உனக்காக நல்லவனா நடந்துக்குனுமுன்னு தோனுது”, “நான் விசுவாசிடா …

ஆனால் முட்டாள் கிடையாது. இங்குயாருமேநல்லவங்க,கெட்டவங்கன்னு கிடையாது…. எல்லாருமே இங்க, அதிர்ஷ்டத்தை நம்பி தான் வாழுறாங்க … ” என்பது உள்ளிட்ட வசீகர வசனங்களுக்காகவும், பர்மாவின் அன்றைய ரங்கோன், இன்றைய யங்கோனின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டிருக்கும் விதத்திற்காகவும் “ரங்கூன் ” படத்தை ரசிகர்கள், பலமுறை பார்க்கலாம் ரசிக்கலாம்!

பைனல்” பன்ச் ” : “ரங்கூன்’- ‘அகதியின் அவல வாழ்க்கையைபேசி, ரசிகனை அழகாய் ஈர்க்கிறது.

Leave a Response