பசு வதை தடுப்பு சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டம்…

thirumaa
பசுக்களை வாங்க-விற்க புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இந்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

thiruma
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது: மத்திய அரசும் வனத்துறையும் சேர்ந்து புதிய விதிகள் அறிவித்துள்ளன. அது என்னவென்றால் ஒருவன் தன் சொந்த பசுவை விற்கவோ அல்ல வாங்கவோ நினைத்தால் ஒரு உறுதிமொழி எடுக்கவேண்டும் என்றும் மாவட்ட அலுவரிடமும் மேலும் ஒழுங்கு செய்யும் குழுவின் பொருளாரிடமும் அனுமதி பெற வேண்டும் அப்பொழுதுதான் வாங்க-விற்க முடியும். இது வாங்குபவர்க்கும் ஒத்துப்போகும். இந்த விதிகள் பார்த்தால் மக்களின் அன்றாட வாழ்வை சிரழிக்கும் வகையில் உள்ளது என்றும் மேலும் இந்த விதி முற்றிலும் செல்லத்தக்கது ஏனென்றால் மிருகவதை தடுப்பு சட்டம் பிரிவு 11 கிழ் மிருகங்களை உணவுக்காக உண்ணலாம் எனவே ஒரு சட்டத்தின் மாறாக வேறு சட்டம் இயற்ற முடியாது.

இதேபோன்று மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆடு,கோழிகளை பலி குடுக்க கூடாது என்றார் பின்னர் மக்களின் எதிர்ப்பை பார்த்து தானாகவே வாபஸ் வாங்கி விட்டார். மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரை மக்கள் போராட்டம் ஓயாது என்றும் மோடி அரசு மூன்றாண்டு ஆட்சியில் மக்களின் பிளவுதான் ஏற்படுத்திருக்கு தவிர மக்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி காட்டவில்லை எனவே இந்த திட்டத்தை முறியடிக்க வாருங்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தில் தன் உரையை முடித்தார்.

Leave a Response