ஆதார், பான்கார்டை இணைக்க ஒரு எஸ்.எம்.எஸ். போதும் புதிய வசதி…

pan
நம்ம பிஸியான வேலைகளின் இடையில் எதாவது வேலை வந்தால் அன்றைய நாள் வீணாக போகும் அல்லவா. இதை புரிந்து கொண்ட வருமான வரித்துறை புதிய வசதி ஒன்றை கொண்டுள்ளது.

அதாவது வரும் ஜூலை மாதம் முதல் வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் கார்டு எண்ணோடு, ஆதார் எண்ணையும் இணைத்து இருக்க வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் இணைக்க பல்வேறு வசதிகளை வருமான வரித்துறை அறிமுகப்டுத்தி வருகிறது.

இணையதளம் மூலம் பான்கார்டு எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் இ-வசதியை வருமானவரித்துறை அறிமுகம் செய்து இருந்தனர். அதில் ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும், பான் கார்டில் இருக்கும் பெயரும் சிறிய எழுத்துப்பிழை இருந்தாலும், பிறந்த தேதியும், பாலினம் சரியாக இருக்கும் பட்சத்தில் நாம் குறிப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஒரு பாஸ்வேர்டு அனுப்பப்படும் அதை இணைதளத்தில் பதிவிட்டால் பான்கார்டும், ஆதார் கார்டும் இணைக்கப்படும்.

Leave a Response