மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா?.. இந்த உணவுகளை உண்ணுங்கள்…

brain
நம்ம மூளையை சுறுசுறுப்பா இருக்க எளிய வழி வாங்க தெரிஞ்சிகோங்க.

1. தினமும் ஒருவாழைப்பழம்:

வாழைபழத்தில் உள்ள ட்ரிப்டோபன், டைரோசின் என்ற அமினோ அமிலங்கள் மற்றும் செரோடோனின், டோபமைன் போன்ற இரசாயன சத்துக்கள் கடினமான மூளை உழைப்பில் ஈடுபட்டாலும் சோர்வு ஏற்படாமல் தவிர்க்கவும், தொடர்ந்து சுறுசுறுப்புடன் வேலையில் ஈடுபடவும் உதவுகின்றன.

வாழைப்பழத்தில் நிறைய உள்ள சி வைட்டமின் மூளைக்குத் தேவையான நார் எபினெரின் உருவாக்க உதவுகிறது.
மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமலும் இது காக்கிறது.

2.பப்பாளி:

மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமல் இருக்க இதிலுள்ள சி வைட்டமின் உதவுகிறது,
மூளைக்குத் தேவையான செரட்டோன் கிடைக்க உதவும் ஃபோலிக் அமிலம் இதில் தேவையான அளவு உள்ளது.

பப்பாளி கண் நலத்துக்கும், மலச்சிக்கல் வராமல் இருக்கவும் உதவும்.

3.கருப்பட்டி வெல்லம்:

பனஞ்சாற்றிலிருந்து காய்ச்சி எடுக்கப்படும் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் மூளைச் சோர்வை நீக்க உதவுகிறது.

இதிலுள்ள பி6, பி12 வைட்டமின்கள் அதற்கு உதவுகின்றன. வெதுவெதுப்பான சூட்டிலுள்ள பாலில் கருப்பட்டியைச் சேர்த்துக் குடித்தால் உடன் உற்சாகம் கிடைக்கும்.

Leave a Response