ஒரே நாளில் 10 மயில்கள் மர்மச்சாவு: காரணம் என்ன…

mayil
கொளத்தூர் அருகே ஒரே நாளில் 10 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கொளத்தூர் அருகே தின்னப்பட்டியில், காவிரி கரையில் மலைகளுக்கு நடுவே வண்டிகாரன்காடு கிராமம் உள்ளது. இங்கு விவசாயிகள் பல்வேறு தானியங்களை பயிரிட்டுள்ளனர். இரையை தேடி இப்பகுதிக்கு வரும் மயில்கள், விவசாயிகள் விதைத்த தானியங்களை சாப்பிட்டு செல்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை, இப்பகுதியில் 6 பெண் மயில்கள் உள்பட 10 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ஏதேனும் நோய் பரவி மயில்கள் இறந்ததா? அல்லது தானியங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் விஷம் வைத்து கொன்றனரா? என விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் 10 மயில்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…

Leave a Response