விரைவில் மெட்ரோ ரெயிலுடன் இணையும் பறக்கும் ரயில்…

train_service
கோயம்பேடு முதல் ஆலந்தூர், விமானம் நிலையம் வரையில் உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம் – நேருபூங்கா வரையில் சுரங்க பாதையிலும் பயணிகள் சேவை தொடங்கி உள்ளது.

‘குளுகுளு’ பயண வசதிகளுடன் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பயணிகள், பொது மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த ரெயில் சேவையை மேலும் விரிவுப்படுத்த பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

சென்னை கடற்கரை (பீச்) முதல் – வேளச்சேரி வரை உயர்மட்ட பாதையில் பறக்கும் ரெயில் சேவை திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ 5 முதல் 10 ரூபாய் வரையில் குறைந்த கட்டணத்தில் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் வேளச்சேரி வரையில் செல்லும் இந்த ரெயிலுக்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த வழித்தட ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கூட்டம் குறைந்து வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பறக்கும் ரெயில்களை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைப்பது தொடர்பாக ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. நவீன வசதிகளுடன் பறக்கும் ரெயில் நிலையங்களை மாற்றி அமைப்பது, ‘குளு குளு’ ரெயில்களை இயக்குவது தொடர்பாக ஆய்வறிக்கை, திட்டமதிப்பீடு, 6 மாதத்துக்குள் தயார் செய்யும் பணியில் மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரிகள், தென்னக ரெயில்வே அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் இரு ரெயில்களையும் இணைப்பதற்கு 3 ஆண்டுகள் வரை ஆகும் என்று தெரிகிறது.

Leave a Response